இலத்திரனியல் ஊடகத்துறையில் ஒலி ஊடகமான வானொலி, இன்று தேச எல்லைகள் கடந்து உலக மக்களைச் சென்றடையும் அளவு விசுவரூபமெடுத்துள்ளது.
தென்கிழக்காசியாவில் முதன் முதலில் வானொலியை ஆரம்பித்த பெருமைக்குரிய இலங்கைத் திருநாட்டிலே, 1925 முதல் அரசின் கட்டுப் பாட்டிலேயே வானொலி இருந்து வந்தது. 1993 ம் ஆண்டு நடுப்பகுதியில் தான் தனியார் வானொலிகள் இயங்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால் உத்தியோகப் பற்றற்ற வகையில் 70பதுகளின் நடுப்பகுதியிலேயே யாழ்ப்பாணத்தில் தனியார் வானொலி ஆரம்பமாகிவிட்டது.
யாழ் நவீன சந்தையில் மாநகரசபையால் ஒலிபரப்புச்சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
அது பின்னர் மணிக்குரல் சேவையாக இயங்கியது.
தொடர்ந்து மக்கள்குரல், விக்ரர் அன் சன்ஸ் ஒலிபரப்புச்சேவைகள் யாழ் நவீன சந்தையில் நடைபெற்றன.
இந்த சேவை பின்னர் யாழ்.மத்திய பேரூந்து நிலையம் வரை விரிவுபடுத்தப்பட்டது. ஒலி ஊடகனாக எனது முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட ‘பெஸ்ற்ரோன்’ ஒலிபரப்புச் சேவை படைத்த சாதனைகள் காலம் மறக்கக் கூடாத வரலாறு. 78 ம் ஆண்டு முதல் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் இயங்க ஆரம்பித்த Best tone வானொலி 82 வரை வெற்றிகரமாக இயங்கி வந்தது.
தாய் வானொலியாம் இலங்கை வானொலியில் இருந்து அவ்வப்பொழுது யாழ்.மண்ணுக்கு வரும் மூத்த அறிவிப்பாளர்களது குரல்களும் இந்த வானொலியூடாக ஒலிப்பது உண்டு.
இலங்கை வானொலியில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தால், வானொலி நிலையத்தின் விதிமுறைக்கமைய இலங்கை வானொலி நிலையத்திலிருந்து 15 கிலோ மீற்றர் சுற்றுவட்டதுக்குள் கொழும்பில் வாழ்க்கையை ஆரம்பித்தேன். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வர்த்தக முகவராகவும் பணியாற்றிவந்தேன். அப்பொழுது யாழ்நகர வர்த்தகவிளம்பரங்கள் பல இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகியிருந்தன.
போர்மேகங்கள் சூழ்ந்த பூமியிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் தமது மொழியையும் கலை, கலாசாரப் பண்பாட்டுக் கோலங்களையும் தம்மோடு சுமந்து சென்றதுபோல் நானும் Best tone வானொலியும் புலம் பெயர்ந்து ஐரோப்பிய மண்ணிலே நிலை கொண்டோம். அடைக்கலம் தந்த பிரான்ஸ் மண்ணிலே Best tone வானொலி, ‘தமிழமுதம்’ வானொலியாக மறு பிறவி எடுத்தது.
பிரான்ஸில் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வானொலி நிலையங்களான றேடியோ ஏசியா, போர் எவ்.எம், றேடியோ பேயி ஆகியவற்றினூடாக வாரம் ஒரு மணி நேரம், பின்னர் தினமும் இரண்டு மணி நேரம் என F.M. பண்பலை வரிசையில் ‘தமிழமுதம்’ வானொலி ஒலிபரப்பு நடைபெற்றுவந்தது.
லண்டன் BBC யின் ‘தமிழோசை’ நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடொன்றில் தொடர்ச்சியாக தமிழ் ஒலித்தது என்றால் அந்தப் பெருமை ‘ தமிழமுதம்’ வானொலிக்கே உரியது.
1997ல் லண்டன் மாநகரில் ஒரு தனித்தமிழ் வானொலியை ஆரம்பிக்கும் எண்ணம் கொண்டு, ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் அழைத்தபொழுது, பாரிஸ் எவ்.எம் ஒலிபரப்பை நிறுத்திவிட்டு ஐபிசி தமிழ் வானொலிக்காகப் பணியாற்றச் சென்றேன். 2009 வரை நீடித்த அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் வானொலியின்
பயணத்தில் ஒரு சிறு தடங்கல். நிறுவனத்தை இயக்கிவந்தவர்களின் கவலையீனத்தால் நிர்வாகங்கள் மாறின. ஆனால் வானொலி மீதான எனது பற்று மாறவில்லை. விளைவு? 2010முதல் மீண்டும் பரிஸில் ‘தமிழமுதம்’ வானொலி எவ்.எம் பண்பலை வரிசையில் தனது பயணத்தை ஆரம்பித்தது. பின்னர் மீண்டும் ஓர் அழைப்பு லண்டனில் இருந்து. ஐபிசி தமிழ் வானொலி மீது பரிவு கொண்டு 2014ல் அதனைப் பொறுப்பேற்ற தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் அவர்கள் அழைத்தார், எனது முதல் மரியாதைக்குரிய மூத்த ஒலிபரப்பாளர் சகோதரர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்களும் ஐபிசி தமிழ் பணிக்குப் பங்களிப்பு வழங்கும்படி ஆலோசனை வழங்கினார். செய்மதி, எவ்.எம்( பண்பலை) மற்றும் இணையத்தளம் அனைத்திலும் தமிழமுதம் ஒலிபரப்பாகிவந்தது. தமிழமுதம் வானொலியை மீண்டும் நிறுத்திவிட்டு, மறுபடியும் ஐபிசி தமிழ் வானொலியில் 2014 முதல் 2022 வரை பணி தொடர்ந்தது.
மீண்டும் ஓர் இடைவெளி. இதோ
2024 ஜனவரி முதல் மீண்டும் பரிஸ் பண்பலை வானலைகளில், அனைத்துலகத் தமிழ் ஒலிபரப்பு நிலையம் ‘தமிழமுதம்’ நிகழ்ச்சியை வானலையில் சுமந்து கொண்டு எனது ஒலி ஊடகப் பயணத்தைத் தொடர்கிறேன்.
அனைத்துலகத் தமிழ் ஒலிபரப்பு நிலையம் – ITBC வானொலி ‘றேடியோ சொலெயில்’ எவ்.எம் அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகி வருகிறது.
இணையத் தளத்தினூடாகவும்,
உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள் எமது ஒலிபரப்பைக் கேட்கலாம்.
எமது ஒலிபரப்பு பிரிட்டன் பிரான்ஸ் தேசங்களிலிருந்து இயக்கப்படுகிறது
Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit ametion consectetur elit. Vesti at bulum nec odio aea the dumm ipsumm ipsum.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit ametion consectetur elit.
Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit ametion consectetur elit. Vesti at bulum nec odio aea the dumm ipsumm ipsum that.
Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit ametion consectetur elit. Vesti at bulum nec odio aea the dumm ipsumm ipsum that.
Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit more a ametion consectetur elit. Vesti at bulum nec odio aea the dumm ipsumm ipsum.